கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்
ADDED :2125 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, பகல் பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கி, வரும் ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது.மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட பெருமாள் உள்பிரகாரம் வலம் வந்தபின் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள செய்கின்றனர்.பகவத் பிரார்த்தனையுடன் உற்சவம் துவங்குகிறது. பக்தர்களுக்காக மகா சங்கல்பம் செய்தபின், சாற்றுமுறை, சேவை பூஜை நடக்கிறது. பெருமாள் பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கின்றனர். மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.