பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :2271 days ago
கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடந்தது. சோமவாரத்தையொட்டி நேற்று மதியம் உச்சிகால பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வாழைப்பூ கலச வழிபாடும், அதனைத்தொடர்ந்து மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. சிறுவாலை, சூரப்பட்டு, கெடார், விழுப்புரம், கண்டாச்சிபுரம், சித்தாத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.