உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் சிற்பங்களில் அமர்ந்து சிறுவர்கள் குதுாகலம்

மாமல்லபுரம் சிற்பங்களில் அமர்ந்து சிறுவர்கள் குதுாகலம்

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள சிங்கம், நந்தி சிற்பங்களின் மீது அமர்ந்து, சிறுவர் - சிறுமியர் குதுாகலிக்கின்றனர்.

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள, பல்லவ சிற்பங்களை, சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர். கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை சிற்பங்களை, பயணியரை ஈர்க்கின்றன.இது ஒருபுறமிருக்க, ஐந்து ரதங்கள் வளாகத்தில், தனித்தனி சிற்பமாக உள்ள, சிங்கம், நந்தி சிற்பங்கள், சிறுவர் - சிறுமியரை வெகுவாக கவர்கின்றன. இவற்றின் மீது அமரவைக்கப்பட்ட பின், சிறுவர்கள் குதுாகலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !