உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் அருகே மண்டலாபிஷேக நிறைவு விழா

சங்கராபுரம் அருகே மண்டலாபிஷேக நிறைவு விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தில் ஏரிக்கரையில் செல்லியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது.நேற்று முன் தினம் 29 ம் தேதி மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் மண்டலாபிஷேக நிறைவு விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடுவனுார் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !