இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED :2121 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு இன்று புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சோமாஸ்கந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும், ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகளும் செய்தனர்.