ராமேஸ்வரம் இலவச விடுதியில் வசூல்: வட மாநில பக்தர்கள் தவிப்பு
 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் இலவச தங்கும் விடுதியில் ஒய்வெடுக்கும் வட  மாநில பக்தர்களிடம் வாடகை வசூலிப்பதால் தவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ராம நாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான  இலவச தங்கும் விடுதிகள் (ஆண், பெண் தனித்தனியாக) உள்ளது. இந்த விடுதி கோயிலில் இருந்து 1.5 கி.மீ.,ல் இருப்பதால், இங்கு பெரும்பாலான பக்தர்கள் ஒய் வெடுக்க விரும்பு வதில்லை.
இதனால் தங்கும் விடுதியை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் குடிநீர் சுத்திகரிப்பு  இயந்திரம் பழுதாகி, கழிப்பறை அசுத்தமாகவும், முள்மரங்கள் வளர்ந்து பயனற்ற  நிலையில் இருந்தது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று(டிசம்., 31ல்) வட மாநில  பக்தர்கள் ஆயிரம் பேர் படுக்கை விரிப்பு, குடிநீர் கேனுடன் தங்கினர். மேலும் 3 வேளையும் கேஸ் சிலிண்டரில் உணவு சமைத்து பரிமாறினர்.
கடந்த 3 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடந்த இலவச விடுதியில் திடீரென குவிந்த  பக்தர் களிடம், உள்ளூர் ஏஜன்டுகள் ஏமாற்றி வாடகை வசூலித்துள்ளதாக, இந்து அமை ப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொது செயலர் ராமமூர்த்தி கூறுகையில், கோயில்  இலவச தங்கும் விடுதியில், தற்போது ஏஜன்டுகள் சிலர் பக்தர்களிடம் வாடகை வசூலி த்துள்ளனர். இதற்கு கோயில் ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். இது போன்ற செயல்  இலவச விடுதியில் பலமுறை நடந்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.