திருவண்ணாமலையில் புத்தாண்டு தரிசனம்: குவிந்த பக்தர்கள்
ADDED :2188 days ago
திருவண்ணாமலை: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில், மார்கழி மாதம் முழுவதும் இரண்டாம் பிரஹாரத்தில் உள்ள உற்சவ மூர்த்தி உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வெள்ளி கவசத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தங்க கொடிமரம் அருகே உள்ள சம்மந்த விநாயகர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.