ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து உற்சவம்: 7ம் நாள்
ADDED :2126 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் நாள் விழாவில் சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து 7ம் நாள் விழாவில் நம்பெருமாள் சவுரி கொண்டை, நெற்றில் களி குதிரா, ரத்தினஅபய ஹஸ்தம், மார்பில் லட்சுமிபதக்கம், முத்துச்சரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை,அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அர்ஜுனா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.