ஆதிபராசக்தி மன்றம் விளக்கு பூஜை
ADDED :2120 days ago
ராமநாதபுரம்: முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விளக்குபூஜை நடந்தது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள சித்திரங்குடி, ஏனாதி,எஸ்.பி.கோட்டை உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மாலை அணிந்து ஒரு மாதகாலமாக விரதம் கடை பிடிக்கின்றனர். வழிபாட்டு மன்றத்தில் சக்தி பழனிசாமி தலைமையில் 22ம் ஆண்டு விளக்குபூஜை நடந்தது.பின்பு சிறப்புபூஜை, ஆராதனைகள் நடந்தது.மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.சுற்றுவட்டார பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.