திருப்புத்தூரில் நந்தீஸ்வரர் பிரதிஷ்டை
ADDED :2184 days ago
திருப்புத்துார்:திருப்புத்துாரில் சீதளி தெப்பக்குளத்தின் மேலமடை நந்தீஸ்வரர் பிரதிஷ்டை விழா நடந்தது.
குன்றக்குடி ஐந்துதேவஸ்தானத்திற்குட்பட்ட திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமான சீதளி குளத்திற்கு இரண்டு மடைகள் உள்ளன. அதில் மேல மடையில் நீர்வரத்து ஏற்பட்டால் குளக்கரை முழுமையாக பெருகும். அந்த மடை செல்லும் வழியில் குளத்தின் வடமேற்கு மூலையில் நந்தீஸ்வரர் சிலை உள்ளது. அதற்கான வழிபாடு பல ஆண்டுகளாக மறைந்து இருந்தது. 100 ஆண்டுகளுக்கும் பழமையான நந்தீஸ்வரர் சிலை தற்போது புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகம் துவங்கியது. தொடர்ந்து புனிதநீரால் அபிேஷக ஆராதனை நடந்தது. ஏற்பாட்டினை மேலத்திருத்தளிநாதர் கோயில் பிரதோஷக்குழுவினர் செய்தனர்.