வித்யா கணபதி கோயில் மண்டலாபிஷேகம்
ADDED :2184 days ago
ராமநாதபுரம்: பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்வித்யா கணபதி கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது.
மண்டாலாபிஷேக நிறைவு நாளான நேற்று முன்தினம் துவங்கி கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜைக்கு பின், நேற்று 108 கலாஷாபிஷேகம், 2 ம் காலயாக பூஜையுடன் விழா நிறைவடைந்தது. பின்னர் வித்யா கணபதிக்கு அபிஷேகம் நிறைவடைந்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் சார் பதிவாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலு, பரமக்குடி டி.எஸ்.பி., சங்கர்,கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கோவிந்தன்உள்ளிட்ட நிர்வாகிகளும், தலைமையாசிரியர் நாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.