உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் வரும் 6ல் வைகுண்ட ஏகாதசி

பெருமாள் கோவில்களில் வரும் 6ல் வைகுண்ட ஏகாதசி

பெருமாள் கோவில்களில் வரும் 6ல் வைகுண்ட ஏகாதசி:

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 6ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 5ம் தேதி முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்களும் மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது.வரும், 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.* பொள்ளாச்சி டி.


கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 6ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னபிரசாதம் வழங்குதல் நடக்கிறது.சொர்க்க வாசலில் கட்டுவதற்கு காய், கனிகள் மற்றும் திரவிய பொருட்கள் வரும், 5ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை வழங்கலாம், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !