செங்கமாமுனியப்பன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2183 days ago
குமாரபாளையம்: பல்லக்காபாளையம், செங்கமாமுனியப்பன் திருவிழாவையொட்டி, குமாரபாளையத்தில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் செங்கமாமுனியப்பன் கோவில் திருவிழா, மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 23ல் துவங்கியது. கடந்த, 2ல் உற்சவர் பெரும்பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நேற்று இரவு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முனியப்பன் சுவாமி அருள்பாலித்தவாறு வந்தார். இன்று, கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பொங்கல் வைத்து படையலிட்டு வணங்குவர். நாளை மஞ்சள் நீராட்டு விழா திருவீதி உலா நடைபெறவுள்ளது.