உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்க்கலப்பையுடன் எம்பெருமாள் காட்சி: பக்தர்கள் பரவசம்

ஏர்க்கலப்பையுடன் எம்பெருமாள் காட்சி: பக்தர்கள் பரவசம்

 உடுமலை: உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில், நம்பெருமாள் ஸ்ரீ பலராம அவதாரத்தில் நேற்று அருள்பாலித்தார். உடுமலை, பெரியகடை வீதி, ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, பகல்பத்து உற்சவம் நடந்து வருகிறது.

தினமும், காலை பஜனை, ஆழ்வார் பாசுரங்கள் சேவை மற்றும் எம்பெருமாள் தினமும் ஒரு திரு அவதாரக்காட்சிகள் நடந்து வருகிறது.நேற்று, பெரிய திருமொழி பாசுரங்கள் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உழவுக்கு உதவும் ஏர்க்கலப்பையுடன், ஸ்ரீ பலராமவதாரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று, கிருஷ்ணவதாரமும் நாளை மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, சொர்க்கவாசல் திறப்பு, வரும், 6ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, சீனிவாச பெருமாளுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. காலை, 5:00க்கு, சொர்க்கவாசல் திறப்பு மற்றும் கருட வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, திருவாய்மொழித்திருநாள், இராப்பத்து உற்சவம் துவங்குகிறது. தினமும், மாலை, 6:00 முதல் 8:00 வரை, பாசுரங்கள் சேவை, திருஅவதார காட்சிகள் என, வைகுண்ட ஏகாதசி விழா, 16ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !