உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

சபரிமலை ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

 சபரிமலை: ஜோதி தரிசனத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, பக்தர்கள் போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று சன்னிதானம் போலீஸ் தனிஅதிகாரி அஜித்தாஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு மகரஜோதி நாளில் பக்தர் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கூட்டத்தை ஒழுங்கு படுத்த பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். கூடுதல் போலீசார் வருகின்றனர். ஜோதி தரிசிக்கும் இடங்களான பாண்டித்தாவளம், சரங்குத்தி, யூ வளைவு, அன்னதான மண்டபம், உரக்குழி ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அனைத்து இடங்களிலும் தேவசம்போர்டுடன் இணைந்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

ஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் மலை இறங்கும் போது தள்ளுமுள்ளு இன்றி நிதானமாக திரும்ப வேண்டும். இந்த விஷயத்தில் பக்தர்களின் ஒத்துழைப்பை போலீஸ் எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !