திருக்கழுக்குன்றத்தில் சித்தர்கள் கிரிவலம்
ADDED :2278 days ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், சித்தர்கள் கிரிவலம் நேற்று நடந்தது.திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சமய குரவர் நால்வராலும், நான்கு வேதங்களாலும் இங்குள்ள வேதகிரீஸ்வரர் புகழப்பட்டுள்ளார்.இவ்வூரில், திருவண்ணாமலை போன்று மாதந்தோறும் பக்தர்கள் பலர் பிரார்த்தனைகாக கிரிவலம் வருகின்றனர்.இதேபோன்று, இங்கு ஆண்டுதோறும் தனுர் மாதத்தில் உலக நன்மைக்காகவும், உடல் நலம், மனநலம் ஆரோக்கியம் பெருகிடவும், திருமணத் தடை நீங்கவும் சித்தர்கள் கிரிவலம் வருதல் நடந்து வருகிறது.அந்த வகையில், இந்தாண்டு சித்தர்கள் கிரிவலம், நேற்று, அதிகாலை, 3:00 மணிக்கு நடந்தது. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின், திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரரை வழிபட்டனர்.