கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை
ADDED :2396 days ago
செஞ்சி:செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் மார்கழி மாத ராம பஜனை நடந்தது.
அதனையொட்டி, காலையில் கோதண்டராமர், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 9:00 மணிக்கு ராமர் பஜனை தொடங்கியது. இதில் நடுப்பட்டு புருஷோத்தமனின் வில்லுப் பாட்டும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி துறை பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன், ஜனார்தனன் தலைமை தாங்கினர். விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.