உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி உமாமகேஸ்வரி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா

சிவகாசி உமாமகேஸ்வரி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா

சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் உமாமகேஸ்வரி அம்மன் கோயிலில் 24 வது பிரமோற்சவ ஆடித் திருவிழா நடந்தது.


ஒரு வாரத்திற்கு முன்பு கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிவகாசி டவுன், கிழக்கு, திருத்தங்கல் எம்.புதுப்பட்டி மாரனேரி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இன்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. எஸ்.பி., கவுதம் கோயல், டி.எஸ்.பி., அணில் குமார், தனி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தனி ஆயுதப்படையினர் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !