லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில் உபன்யாசம்
ADDED :2180 days ago
திண்டிவனம் லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில், சிறப்பு உபன்யாசம் நடந்தது.
திண்டிவனம் ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில், சிறப்பு உபன்யாசம், திண்டிவனம் லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில், கடந்த 2ம் தேதி துவங்கியது.இதில், திருவல்லிக்கேணி கண்டேனே என்ற தலைப்பிலும், 3ம் தேதி பக்தியை வளர்க்கும் வழிகள் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீ ராமானுஜர் திக்விஜயம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. தென் திருப்பேரை அரவிந்தலோசநன் சுவாமிகள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, பட்டாச்சாரிகள் ரகு, ஸ்ரீதர், சீனுவாச பாகவதர், வழக்கறிஞர் லோகநாதன், பாண்டிய ராமானுஜதாசன், உரக்கடை பாண்டியன், எழுத்தர் சங்கர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.