உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலையில் மலர் காவடி திரளான பக்தர்கள் பங்கேற்பு

கழுகுமலையில் மலர் காவடி திரளான பக்தர்கள் பங்கேற்பு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கழுகாசலமூர்த்தி குடைவரை கோயிலில்  முருக பக்தர்கள் பேரவை சார்பில் மலர் காவடி மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது.

நேற்று அதிகாலையில் கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் முன்பு இருந்து துவங்கிய மலர்க்காவடி ஊர்வலம் கிரிவலப்பாதையில் சென்றது. திரளானவர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை கொண்டு கழுகாசலமூர்த்திக்கு பூச்சொரிதல் நடந்தது.  விழாவில் கவுமார மடாலயம் குமர குருபர சுவாமி, செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமி, புதுக்கோட்டை தயானந்த சந்திர சுவாமி, சிவகிரி ஆதினம் உத்தண்ட ராஜகுரு சுவாமி, துலாவூர் ஆதினம் நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !