உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் இந்த ஏகாதசி?

யார் இந்த ஏகாதசி?

ஒருநாள், போர் விதிமுறைக்கு மாறாக, ஆஸ்ரமத்திற்கு வந்த முரன், அங்கு படுத்திருந்த திருமாலைத் தாக்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விஸ்வரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். திருமால் மனம் மகிழ்ந்தார். ""சக்தியே, அசுரனை அழித்த உனக்கு, ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். திதிகளில் ஒன்றாக ஆக்குகிறேன். அரக்கன் முரனை அழித்த இந்த மார்கழி மாதத்தில், உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன். என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !