ராமேஸ்வரத்தில் தைப்பூச தெப்ப தேர் உலா
ADDED :55 days ago
ராமேஸ்வரம்: தைப்பூசத்தையொட்டி ராமேஸ்வரத்தில் அலங்கரித்த தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந் தருளி உலா வந்தனர்.
நேற்று தைப்பூசத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடகினர். பின் லட்சுமணேஸ்வரர் எழுந்தருளி நேற்று மாலை பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி உற்ஸவம் நடந்தது. பின் அங்குள்ள தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை நடந்தது. பின் பக்தர்கள் தேரில் வடத்தை பிடித்து இழுத்து 11 முறை சுற்றி வலம் வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் தெப்ப தேரோட்டம் முடிந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு சென்றனர்.