ஆடிப்பாடும் அரையர்
ADDED :2137 days ago
வைகுண்டத்தை "திருநாடு என்பர். அங்கு செல்பவர்கள் பெருமாளைத் தரிசிக்கும் பேறு பெறுவர். அவர்களை ""நித்ய சூரிகள்” என்பர். இவர்கள் பசி, தாகம், உறக்கம் ஆகிய உணர்வுகள் இன்றி இருப்பர். பரவச நிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப் பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான திருச்சி – ஸ்ரீரங்கத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளின் மனதில் எழுந்தது. அதற்காக திவ்ய பிரபந்தங்களுக்கு நாட்டிய இசை வடித்தார். "அரையர் என்னும் அபிநயத்துடன் ஆடிப்பாடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே "அரையர் சேவை என்றானது. இந்த சேவை இங்கு மிக பிரபலமானது.