உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கன் வந்த அதிசயம்

அரங்கன் வந்த அதிசயம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் ரங்கநாதர் ஆதிகாலத்தில் அயோத்தியில்  இருந்தவர். ராமர் மற்றும் அவரது முன்னோர்களால் பூஜிக்கப்பட்டவர்.  இலங்கைக்கு கடத்தப்பட்ட சீதையை மீட்க உதவியவர்களுக்கு தன் பட்டாபி÷ ஷகக விழாவில் பரிசுகளை  ராமர் வழங்கினார். அப்போது ராவணனின் தம்பி  விபீஷணனிடம் ""என்ன பரிசு வேண்டும்” எனக் கேட்டார் ராமர். ""இங்கிருக்கும் ரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல  விரும்புகிறேன்” என்றான் விபீஷணன். மறுக்காமல் கொடுத்து அனுப்பினார்.  வழியில் காவிரி நதியைக் கண்ட உடன் ரங்கநாதர் சிலையைக் கீழே  வைத்துவிட்டு நீராடினான். கிளம்பும் போது சிலையை எடுக்க முயன்றான்.  ஆனால் முடியவில்லை. அந்த இடத்தில் ஸ்ரீரங்கம் கோயில் உருவானது.   பிற்காலத்தில், தர்மவர்மன் என்னும் சோழ மன்னர், ரங்கநாதருக்கு கோயில்  எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !