உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குறிக்கு பட்டு

முத்துக்குறிக்கு பட்டு

கூம்பு வடிவ குல்லாவை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு  அணிவித்த பூமாலை, பரிவட்டத்தை அரையர் சேவையில் பங்கேற்போர்  சூடிக்கொள்வர். பாசுரங்களைப் பாடும் போது, அதற்கேற்ப முகம், கைகளால்  பாவனை செய்வர். இதில் முத்துக்குறி என்னும் நிகழ்ச்சியில் ஆடும் போது  பட்டாடை உடுத்துவர். மகளின் எதிர்காலம் குறித்து தாய் கேட்பது போல  பாடல்களைப் பாடுவதே முத்துக்குறி கண்டருளல். இதைக் காண வரும்  பக்தர்களும் பட்டு உடுத்துவது வழக்கம். இதில் தாய், மகள், குறிசொல்பவள் என  மூன்று பாத்திரங்களாக அரையர் ஒருவரே  மாறி மாறி அபிநயம் செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !