நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் கருடசேவை
ADDED :2108 days ago
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோபுர தரிசனமும், கருட சேவையும் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். இங்கு நேற்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கோபுர தரிசனமும், கருட வாகனத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் வீதி உலாவும் நடந்தது. நேற்று காலை, 5:30 மணியளவில் கோபுர தரிசனமும், பின் மலர் அலங்காரத்தில், கருட வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் கருட வாகனத்தில், லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா வந்தார். இதில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.