உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் அம்மனுக்கு 2 டன் பஞ்சாமிர்தம் அபிஷேகம்

பாரியூர் அம்மனுக்கு 2 டன் பஞ்சாமிர்தம் அபிஷேகம்

கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் அம்மனுக்கு, 2 டன் பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சந்தன காப்பு அலங்காரம், ஆகம விதிப்படி கோலாகலமாக நேற்று நடந்தது. முன்னதாக கதளி, பூவன் ஆகிய ரகங்களை சேர்ந்த, 12 ஆயிரம் வழைப்பழங்கள், தேன் மற்றும் கற்கண்டு தலா நான்கு கிலோ, அரை கிலோ ஏலக்காய், 10 கிலோ மாதுளை கொண்டு, இரண்டு டன் அளவுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. இதேபோல், 150 லிட்டர் பால், 50 லிட்டர் தயிர், 100 லிட்டர் கரும்புச்சாறு, 200 இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு, மதியம், 1:00 முதல், 3:00 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அபிஷேகம், அலங்காரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !