உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலெக்டர் நலமுடன் திரும்ப சர்வமத பிரார்த்தனை!

கலெக்டர் நலமுடன் திரும்ப சர்வமத பிரார்த்தனை!

திண்டுக்கல்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ்பால் மேனன் நலமுடன் திரும்ப, அவர் படித்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரியில் சர்வமத பிரார்த்தனை நடந்தது. கல்லூரி செயல் அலுவலர் முகமதுபாட்ஷா தலைமை வகித்தார். பேராசிரியர், மாணவர்கள் உள்ளிட்ட 3000 பேர் பங்கேற்றனர். பிரார்த்தனையில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். "மக்கள் சேவையில் ஈடுபட்ட கலெக்டர் அலெக்ஸ் நலமுடன், விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவரது சேவை தொடர மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். மனைவி, குடும்பத்தினர் நலமுடன் இருக்க வேண்டும், என, வலியுறுத்தினர். இக்கூட்டம் 45 நிமிடம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !