விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வெள்ளி வாகனம்
ADDED :2101 days ago
சிவகாசி:சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு 10 சமுதாய
மண்டகப்படிதாரர்கள் சங்கம் சார்பில் நுாதன பிரதோஷ வெள்ளி ரிஷப வாகனம் உபயமாக வழங்கும் விழா நடந்தது. இதையொட்டி சிவகாசி மண்டபத்தில் நந்தி பெருமானுக்கு விசேஷ யாக பூஜை நடந்தது. ரூ. 15 லட்சம் மதிப்பிலான நந்தி பெருமானை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.நான்கு ரத வீதிகளில் வலம் வந்து உபயமாக வழங்கினர். முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.