உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா!

காளிப்பட்டி கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா!

சேலம்: நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் உள்ள பிரஸித்தி பெற்ற கந்தசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கந்தசாமி ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நட்நதது. தொடர்ந்து, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அழகேசன் மற்றும் பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !