திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் உகந்த நேரம்
ADDED :2177 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், கிரிவலம் செல்கின்றனர்.
இதில், மார்கழி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 1:49 மணி முதல், 11ம் தேதி அதிகாலை, 12:21 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்தது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நாளை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு மகா தீப மை பிரசாதம் சாத்தப்பட்டு, ஆருத்ரா தரிசன விழா நடக்கும்.சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, ஆருத்ரா தரிசன விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, திருவண்ணாமலையிலிருந்து, சிறப்பு பஸ்களை இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.