பழநி கோயிலில் வெளிநாட்டவர் தமிழக உடையில் சுவாமி தரிசனம்
ADDED :2098 days ago
பழநி முருகன் கோயிலுக்கு வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் தமிழக சைவ சமயம், இந்து மத ஆராய்ச்சிக்காக வந்துள்ளனர். சுற்றுலா துறை உதவியுடன் 15 நாட்கள் சைவ கோயில்களில் தரிசிக்கின்றனர். நேற்று (ஜன. 9) பழநி முருகன் கோயிலுக்கு சேலை, வேஷ்டி, நெற்றி நிறைய திலகம் அணிந்து வந்து சுவாமிதரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனம், பொங்கல் விழாக்களையும் கொண்டாட உள்ளனர்.