உள்ளூர் செய்திகள்

பிரதோஷ விழா

சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !