திருமுறைக்கழக ஆன்மிக நிகழ்ச்சி
ADDED :2130 days ago
குமாரபாளையம் அருகே, திருமுறைக்கழக ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். குமாரபாளையம் அருகே, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழக, 79ம் ஆண்டு ஆன்மிக நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, இணை பேராசிரியர் சிதம்பரம், இன்பமே எந்நாளும், எனும் தலைப்பில் பேசினார். இன்று திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு பங்கேற்று சரணாகதி எனும் தலைப்பில் பேச உள்ளார்.