மடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :2196 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் கும்மியாட்டம் ஆடி அம்மனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.