சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு
                              ADDED :2120 days ago 
                            
                          
                           வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மார்கழி பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள் காலை 6:00 மணிக்குமேல் மலையேற அனுமதிக்கபட்டனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பவுர்ணமி வழிபாடு, சந்தனமகாலிங்கம் கோயிலில் நடந்த சித்தர் பூஜையிலும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் அடிப்படை வசதிகளை கோயில் செயல்அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் மதுரை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பகல் 12:00 மணிவரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.