உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தர் மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், விசுவநாத் தத்தா  - புவனேஸ்வரி தேவி தம்பதிக்கு மகனாக, 1863 ஜன., 12ல் பிறந்தார். இந்து துறவி, ராமகிருஷ்ணர் மறைவிற்கு பின், 1886ல், விவேகானந்தரும், ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். கோல்கட்டாவில், ராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார், விவேகானந்தர்.

அமெரிக்காவின், சிகாகோவில், உலக சமய மாநாட்டில், அவர் ஆற்றிய சொற்பொழிவுக்கு, அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விவேகானந்தர், நான்கு ஆண்டுகள், இந்திய துணைக் கண்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பயண முடிவில், 1892 டிச., 24ல், கன்னியாகுமரி வந்தடைந்தார். கடல் நடுவில் அமைந்துள்ள பாறை மீது, மூன்று நாட்கள் தங்கி, தியானம் செய்தார். தன், 39வது வயதில், விவேகானந்தர், 1902 ஜூலை, 4ல், மேற்கு வங்க மாநிலம் பேலுாரில் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

ஆண்டுதோறும் சுவாமிஜியின் பிறந்த நாளான ஜனவரி 12-ஐ தேசிய இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் "சகோதர சகோதரிகளே என முழங்கி, இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகே திரும்பிப் பார்க்கச் செய்த இத்தகைய வீரத்துறவிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவருடைய துணிச்சலான கருத்துக்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், தினமலர் இணையதளத்த‌ில், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள், அவருடைய உரைகள், கதைகள், படங்கள் மற்றும் பல விஷயங்களை வெளியிட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் இதைப் பார்த்து, படித்து பயன் பெற வேண்டும். அவரைப் போல் துணிச்சலும் நேர்மை உள்ளவராகவும் வாழ வேண்டும்.

விவேகானந்தர் பற்றிய அனைத்து தகவல்களுக்கு கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !