ஆருத்ரா தரிசன தேர் பவனி: பக்தர்கள் பரவசம்
ADDED :2203 days ago
ஊட்டி: ஊட்டியில், பவானீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன தேர் பவனி, தோடர் இன மக்களின் ஆட்டம், பாட்டத்துடன் நடந்தது.ஊட்டி அருகே, பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் கோவில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பவானீஸ்வரர் கோவிலில் நீலகிரியின் பாரம்பரிய பூர்வீக குடிகளான தோடர் இனத்தவர் தேரோட்டம் நடத்தினர்.ஊட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்த தேர், இரவு மீண்டும் பவானீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. இதில், நீலகிரியில், பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தோடர் இன மக்கள் ஆருத்ரா தரிசன தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.