கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவள்ளி திருவிழா
ADDED :2202 days ago
கூடலுார்:கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் திருப்பாவை சிறப்பு பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. இராப்பத்து, பகல்பத்து உற்ஸவத்தில் சுவாமி பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்கழி 27 கூடாரவள்ளி திருநாளை முன்னிட்டு சுவாமி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி பெருமாள், ஆண்டாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.