ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா
ADDED :2087 days ago
ஆத்தூர்: கூடாரவள்ளி திருநாளையொட்டி, பெருமாள் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடந்தது.ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கூடாரவள்ளி திருநாளையொட்டி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில், வெங்கடேச பெருமாள், ஆண்டாளுக்கு புதிய வஸ்திரம் சாத்தப்பட்டு, பட்டாச்சாரியார் சூடிக்கொடுத்த சுடர் கொடியால், வெங்கடேச பெருமாள் கரத்தில் வைக்கப்பட்டிருந்த திருமாங்கல்யம், ஆண்டாள் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அப்போது, தங்க கவச அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், கெங்கவல்லி அருகே, வீரகனூர் கஜவரதராஜர் பெருமாள் கோவில், தம்மம்பட்டி உக்ரகத நரசிம்மர் பெருமாள் கோவில்களில் கூடாரவள்ளி விழா கொண்டாடப்பட்டது.