சேவுகம்பட்டியில் வாழைப்பழ சூறை விழா
ADDED :2089 days ago
பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி சோலைமலை அழகர்கோயில் விழாவில் வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன.இக்கோயில்ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம். சோலைமலை அழகர் - பாமா, ருக்மணியுடன் காட்சி தருகிறார். இங்கு தை மூன்றாம் நாள் வாழைப்பழ சூறை விழா நடக்கும். நேற்று ஏராளமான வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன. வீடுகளில் இருந்து வாழைப்பழ கூடைகள் ஊர்வலமாக பூசாரி வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.கோயிலில் பூஜைகள் நடத்தி வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன. வெளியூர்களில் வசிக்கும் கிராமத்தினரும் வாழைப்பழங்களை கொண்டு வந்தனர்.கிராமத்தினர் கூறுகையில், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள், மக்கள் நோயின்றி வாழவும் மூன்று தலைமுறைகளாக இவ்விழா நடக்கிறது என்றனர்.