கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2135 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று துவங்கியது. தை மாத வெள்ளிக்கிழமை சிறப்பினையொட்டி ஊஞ்சல் சேவை தொடர்ந்து நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் மாலையில் நடக்கிறது.வாரம்தோறும் ஒவ்வொரு தை வெள்ளிக்கிழமையும் புண்டரீகவள்ளி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். தாயாருக்கு குங்குமத்தால் லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும் ஊஞ்சல் பாட்டும் நடத்துகின்றனர். தை மாத சிறப்பு பூஜைகளை தேசிகபட்டர் நடத்தி வைக்கிறார்.