தை முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு பூஜை
ADDED :2149 days ago
வீரபாண்டி: சேலம் அருகே, காளிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவிலிலுள்ள ஆஞ்சநேயருக்கு, ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறில், சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி, தை முதல் ஞாயிறான நேற்று காலை, 6:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், வீரபக்த ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.