பாரியூர் கொண்டத்து காளியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு
ADDED :2150 days ago
கோபி: குதிரை வாகனத்தில், கொண்டத்து காளியம்மன், பாரியூர் புறப்பாடு கோலாகலமாக நடந்தது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 9ல் நடந்தது. தொடர்ந்து, 12ம் தேதி மலர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. தெப்போற்சவம் முடிந்து, சூலவேலுடன் வலம் வந்த அம்மனுக்கு, கோபி மற்றும் புதுப்பாளையத்தில், மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. கடந்த, 17ல் நஞ்சகவுண்டம் பாளையம், செல்வ விநாயகர் கோவிலுக்கு, விஜயம் செய்த பாரியூர் அம்மன் மற்றும் சூலவேலுடன் விநாயகருக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஜொலிக்கும் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில், பாரியூருக்கு அம்மன் புறப்பாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. பதி மாரியம்மன் கோவிலில், மண்டல கட்டளை பூஜை முடிந்து, அம்மன் பாரியூர் திரும்பினார். வழிநெடுகிலும் பக்தர்கள், தேங்காய் உடைத்து, அம்மனை வழிபட்டனர்.