சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் உழவார பணி
ADDED :2200 days ago
சென்னிமலை: தைப்பூச விழாவை முன்னிட்டு, கோவில்களில் உழவாரப்பணி நடந்தது. சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில், கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவிலில், தைப்பூச விழா, வரும், 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பிப்.,13 வரை நடக்கவுள்ளது. இதற்காக கோவில்களை சுத்தம் செய்யும் உழவார பணி நேற்று நடந்தது. கர்ப்பகிரகம், அனைத்து சுவாமி சிலைகள், உற்சவ மூர்த்திகள் உள்பட சுத்தம் செய்யும் பணியில், கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.