உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்கறைபட்டி சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அக்கறைபட்டி சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருச்சி : திருச்சி அடுத்த அக்கறைபட்டியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

திருச்சி அடுத்த அக்கறைபட்டியில்,  பிரம்மாண்டமான ஷீரடி சாயிபாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக விருட்சா அறக்கட்டளை சார்பில் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த 22.10.2015ல் நடைபெற்றது. தொடர்ந்து, 12.2.2016 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று நிறைவுபெற்றது.  இங்கு பாபாவின் சமாதி மந்திர், விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தத்தாத்ரேயர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. கடந்த 17ம் தேதி கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சாயிபாபா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !