உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா

ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி கிராமத்தில், ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி இரவு, ஊர் மாரியம்மனுக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள், சிவன் மற்றும் பல்வேறு கடவுள் வேடமணிந்து ஆட்டம் பாட்டங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர், ஊர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மன், நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !