உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவராஜ பெருமாள் கோவில் 77 வது வருட யுகாதி தீர்த்த குட விழா

கரிவராஜ பெருமாள் கோவில் 77 வது வருட யுகாதி தீர்த்த குட விழா

அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள். ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில் 77வது வருட யுகாதி தீர்த்த குட ஊர்வலம்.


அவிநாசி வட்டம் அ..குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில் 77வது வருட யுகாதி தீர்த்த குட திருவிழாவை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து சென்றனர். இன்று கவ்வாள பூஜை, அபிஷேகம், மகாதீபாராதனை, அருள்வாக்கு நடைபெற்றது. கோவில் விழா கமிட்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !