உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் துவங்கியது இலவச லட்டு வழங்கும் திட்டம்

திருப்பதியில் துவங்கியது இலவச லட்டு வழங்கும் திட்டம்

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் இன்று முதல் இலவச லட்டு வழங்கும் திட்டம் துவங்கியது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜன. 1-ம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க முடிவு செய்தது. இந்த புதிய அறிவிப்பின்படி இன்று பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி ஒருநாளைக்கு 20 ஆயிரம் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவச லட்டு என்ற முறையில் தினசரி 80 ஆயிரம் லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 24 லட்சம் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !