ஒருநாள் மட்டும் தொடும் மரம்
ADDED :2097 days ago
அரசமரம் மும்மூர்த்தி வடிவம் கொண்டது. அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகளைக் கொண்ட மேற்பாகம் சிவன். “ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத” என்ற பத்மபுராண ஸ்லோகப்படி இதை வணங்குவோருக்கு ஆயுள் அதிகரிக்கும். செல்வம் பெருகும். திங்கள்கிழமை அமாவாசை வந்தால் அந்நாளை ‘அமா சோமவாரம்’ என்பர். அன்று அரசமரத்தை சுற்றினால் பாவம் தீரும். இந்த மரத்தை பகல் நேரத்தில் மட்டும் சுற்றி வரலாம். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொடக்கூடாது. இதிலுள்ள சுள்ளியை ஹோமத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த ஹோமப்புகை வீட்டில் பரவினால் தீமை நீங்கி நன்மை பெருகும்.